tamilnadu

வெப்ப நிலையும் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வெப்ப நிலையும் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் தமிழ்நாட்டில் அடுத்த  5 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை, ஜூன் 4 - தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05-06-2025 முதல் 09-06-2025 வரை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04-06-2025 முதல் 06-06-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். மேலும், 04-06-2025 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 05-06-2025 மற்றும் 06-06-2025 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 04-06-2025 முதல் 06-06-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.