tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது!

சென்னை, அக்.25- தென்கிழக்கு வங்கக்கடலில் உரு வான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் தீவிரம டைந்து, அக்டோபர் 27 அன்று புய லாக மாறும் என எதிர்பார்க்கப்படுவ தால், வடதமிழக மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தொட ர்ந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்போது மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்  டலமாக நிலைகொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலத்தின் மையம், அந்த மான் நிகோபார் தீவுகளுக்கு மேற்கு தென்மேற்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு  தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலை விலும் உள்ளது.

தயார் நிலையில் முன்னேற்பாடுகள்  

சென்னை, அக். 25 - தமிழகத்தில் வரும் நாட்க ளில் கனமழைக்கு வாய்ப்பி ருப்பதால் நிவாரண முகாம்  களை தயார் நிலையில்  வைக்க அறிவுறுத்தப்பட்டுள் ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரி வித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் சனிக்கிழமையன்று காலை உயர் அதிகாரிகளுடன் மழை முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து  அமைச்சர் கேகேஎஸ் எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆலோ சனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ கத்தில் வட மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்  புள்ளதால் முன்னெச்ச ரிக்கை ஏற்பாடுகள் செய்ய  உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ள தாகவும் நீர்வளத் துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து ஏரிகளின்  நீர்மட்டத்தை கண்காணிக்க வும், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ள தாக வும் கூறினார். தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 24 வரை 21.08  செ.மீட்டர் மழை பெய்திருக் கும் நிலையில், அக்டோபர் 25 வரை மழைப் பாதிப் புக்கு இதுவரை 31 பேர் பலியாகியிருப்பதாகவும்  தெரிவித்தார்.