மதுரை, ஜூன் 7- மதுரை ஆஸ்டின்பட்டி காவல் நிலைய சார்பு ஆய் வாளர் அண்ணாதுரை நிலையூர் அங்கயற்கண்ணி காலனி பகுதியில் சோதனை நடத்தியுள்ளார். அப்போது அப்பகுதியில் சேவல் சண்டை நடத்திய வீரமணி, கணேசன் ,மாரிமுத்து, வல்லரசு, லட்சுமணன், கோடீஸ்வரன், தெய்வேந்திரன், ஏசுதாஸ், கவி யரசு, கௌதம் குமார், பாண்டியன், கார்த்திக், சரவண குமார், கருப்பையா என மொத்தம் 14 பேரை கைது செய்த அவர், 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள் ளார். சண்டையில் ஈடுபடுத்தப்பட்ட ஐந்து சேவல்கள், ஒரு ஆட்டோ, 30 இருசக்கர வாகனங்கள், ரூ.13 ஆயி ரம் பறிமுதல் செய்யப்பட்டது.