காடு மேடு திருத்தியது
அந்தக் காலம்
ரெண்டையும் சமன்படுத்தி
விற்பது
இந்தக் காலம்...!
கழனியெல்லாம் வெளைஞ்சது
அந்தக் காலம்
கழனியில் கல் முளைச்சது
இந்த காலம்..!
மாதம் மும்மாரி பொழிஞ்சது
அந்த காலம்
பசிக்கு மாத்திரை வந்தது
இந்த காலம்...!
மணலில் வீடு கட்டியது
அந்த காலம்
மணலுக்கு கல்லறை
எழுப்பியது
இந்த காலம்..!
நதியோரத்தில் திவசம் செய்தது
அந்த காலம்
நதிக்கே திவசம் செய்வது
இந்த காலம்..!
நாட்டில் கொள்ளை போனது அந்தக் காலம்...!
நாடே கொள்ளை போவது
இந்தக் காலம்..!