30 ஆயிரம் ஊழியர்களை நீக்க டிசிஎஸ் முயற்சி சென்னையில் ஐடி ஊழியர்கள் போராட்டம்
சென்னை, ஆக.19 - 30 ஆயிரம் பணியாளர்களை நீக்க டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டிசிஎஸ்) நிறுவனம் முடிவெடுத்துள் ளது. இதை கைவிடக் கோரி செவ்வா யன்று (ஆக.19) சென்னையில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியாவின் மிகப்பெரிய தக வல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவன மான டிசிஎஸ் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் லா பங்கள் உயரும் போது, உயர் பதவி யில் இருப்பவர்களின் ஊதியம் உயர் கிறது. அதேசமயம் ஊழியர்கள் பணி நீக்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற னர். கட்டாய ராஜினாமா, மிரட்டல், சட்டவிரோத பணிநீக்கம் தொடர் கிறது. இதை அரசு கண்டுகொள்ளா மல் உள்ளது. எனவே மிகப்பெரிய அளவிலான இந்த பணிநீக்க நடவடிக்கையை டிசிஎஸ் நிறுவனம் கைவிட வேண்டும். இதில் மாநில அரசுகள் தலையிட வேண்டும். தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பிரச்சனையை கை யாள முத்தரப்புக் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சார்பு தொழில் ஊழியர் சங்கம் (யுனைட்) இந்த போராட்டத்தை நடத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யுனைட் பொதுச் செயலா ளர் அழகுநம்பி வெல்கின், “இந்தப் பிரச்சனையில் அனைத்து மாநில அரசுகளும் தலையிட வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களை முறைப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் படுத்த வேண்டும். இந்த பிரச்ச னைக்கு காரணமான டிசிஎஸ் நிறு வனத்தின் தலைமை மேலாண்மை அதிகாரி கீர்த்திவாசன், மனிதவள அதிகாரி மிலாண்ட் ஆகியோர் பதவி விலக வேண்டும்” என்றார். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர்கள் கே.சி.கோபிக் குமார், பா.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் எம்.சந்திரன், தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செந்தில்குமார், யுனைட் நிர்வாகிகள் ஆசாத், சென்சியா உள்ளிட்டோர் பேசினர்.