tamilnadu

img

ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி: அமைச்சர் சக்கரபாணி

சென்னை,ஜூலை 5- ரேசன் பொருட்கள் 98 விழுக்காடு பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக தில்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கலந்து  கொண்டு பேசுகையில், “தமிழ்நாடு அரசு , அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வரு மானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய  கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்கு மான பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது” என்றார். 01.11.2016 முதல் தேசிய உணவு  பாதுகாப்புச் சட்டம், 2013 அமல்படுத்தப் பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையினைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கு வதற்கான கொள்கைகளையும் திட்டங் களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கி றது எனவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டிலுள்ள பொது விநி யோகத் திட்ட அங்காடிகளில் நடை பெறும் பரிவர்த்தனைகளில் 98 விழுக்காடு  கைவிரல் ரேகை பதிவு மூலம் நடை பெறுகிறது. இதனால் உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவது உறுதி செய்யப்படுகிறது எனவும் அமைச்சர் கூறினார்.

;