மதுரை, மே 25- ராஜ் அசோசியேட்ஸ் (கட்டு மான நிறுவனம்) பாலம் யூத் வெல்பர் கிளப், எக்ஸோடஸ் அறக்கட்டளை சார்பாக யா.நர சிங்கத்தில் கொரோணா ஊர டங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சுமார் 1000 ரூபாய் மதிப்புள்ள அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் 1000 நபர்களுக்கு வழங்கப்பட் டது. 7,000 ஹார்லிக்ஸ் பாட்டில் களும் வழங்கப்பட்டது. திங்க ளன்று நடைபெற்ற நிகழ்விற்கு ராஜ் அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குநரும் வாலிபர் சங்க மாவட்டக் குழு உறுப்பினருமான த.ராஜேஸ் தலைமை வகித்தார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். மாயாண்டி, எம்.கலைச்செல் வன், தாலுகா குழு உறுப்பினர் பி. தனசேகரன், ஆர்.மனோகர், மற்றும் யா.நரசிங்கம் ஊராட்சித் தலைவர் யு.ஆனந்த், ஒன்றி யக்கவுன்சிலர் எஸ்.பிரசன்ன குமார் ஆகியோர் கலந்து கொண் டனர்.