சென்னை, டிச.28- பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- தமிழக முதல்வர், ஏற்கெனவே அறிவிக்கப் பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பை யும் சேர்த்து வழங்க வேண்டும் என்று விவசாயி களிடமிருந்து கோரிக் கைகள் வரப்பெற்றது. இது குறித்து, புதனன்று (டிச.28) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்
ஜன.3முதல் டோக்கன்
விவசாயிகளின் கோரிக் கையினை ஏற்று, ஏற்கெ னவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு ஒன்றையும் சேர்த்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்க ளில் வசிக்கும் குடும்பங் களுக்கும் வழங்க உத்தர விட்டுள்ளார். இதனடிப் படையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வு ஜனவரி 2 க்கு பதிலாக 9 அன்று தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற் கான டோக்கன் கொடுக்கும் பணி ஜன. 3 முதல் 8 வரை நடைபெறும். முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுரு கன், கே.ஆர். பெரிய கருப்பன், அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகா னந்தம், துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செய லாளர் சி. சமயமூர்த்தி, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை யில்,“உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப் பட்ட, பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது விவசாயிகள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே, செங்கரும்பை விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் முதல்வரி டம் கோரிக்கை வைத்தது. இதே கோரிக்கையை பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தின. தற்போது தமிழக முதல்வர், பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறது” என்று கூறியுள்ளார். மேலும், செங்கரும்பை விவசாயி களிடம் கட்டுப்படியான விலைக்கு தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆர். முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், “பொது மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் ஜனநாயக பண்பு கொண்ட முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், கடுமையான நிதி நெருக்கடி நிலவும் சூழலிலும் பொங்கல் தொகுப்பில் கரும்பும் சேர்த்து வழங்க முடிவு செய்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.