திருச்சிராப்பள்ளி, ஆக.13 - திருச்சி வேர்ல்ட் சிலம்பம் யூத் பெர்டேஷன் சார்பில் தில்லை நகர் கி.ஆ.பெ.விசுவநாதன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிறன்று தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ‘சிலம்பம் காப்போம்’ என்ற தலைப்பில் சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் இரண்டு சிலம்ப குச்சியை கொண்டு, சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர். இந்த சாதனையானது துபாய் ஜென்ட்ஸின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. காலை 6.30 மணி முதல் 9.30 வரை என 3 மணி நேரம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் இடத்தை ஆறுநவீன் விக்னேஷ் மாஸ்டரும், இரண்டாம் இடத்தை சீர்காழி விமல் மற்றும் கோகுல், மூன்றாம் இடத்தை முத்துமாரி ஆகியோர் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கபடி வீராங்கனை திவ்யாவிற்கு, மேல் படிப்பிற்காக ரூ.1,50,000 நன்கொடை வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை உலக சிலம்ப இளையோர் சம்மேளனத் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.