tamilnadu

img

தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை.3- கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு  அமல்படுத்தி யுள்ள நிலையில் தனியார் கல்வி நிறுவ னங்கள் நடப்பு ஆண்டு ஊரடங்கு மற்றும் நிலுவையிலுள்ள கல்வி கட்ட ணங்களை பெற்றோர்களிடம் பெறக் கூடாது. மாணவர்களின் உளவியல் நலன்கருதி ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. எனினும் சில தனியார் கல்வி நிறுவ னங்கள் அரசு உத்தரவை மீறி செயல் பட்டு வருகின்றன. அத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை பொருளாதார பாரபட்ச மின்றி அனைத்து மாணவர்களும் பெற்றிட வழி வகுத்திடும் வகையில் தமிழக அரசானது கல்விக்கான தொலைக்காட்சி சேனலை இயக்கிட வேண்டும் என்று  வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகர்கோவில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலை வர் பதில் சிங் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் அபிநயா, சச்சின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;