தெரு நாய்க்கடி விவகாரம்! தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவு
சென்னை: தெரு நாய்க்கடி விவகாரம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அடுத்த திங்கட்கிழமை (நவ.3) ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாய்க்கடி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவ டிக்கை பற்றி பிரமாண பத்திரத்தை, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தாக்கல் செய்ய இரண்டு மாத கால அவகாசம் வழங்கியும், பல மாநில அரசுகள் அதை செய்யாததால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தற்போது வரை மேற்குவங்கம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்தான் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்திருக்கின்றன. எனவே, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநி லங்களின் தலைமைச் செயலாளர்கள் (தமிழ்நாடு உட்பட) அடுத்த திங்கட்கிழமை (நவ.3) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.