tamilnadu

பொது இடங்களில் சிலைகள்: அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 7- தமிழகம் முழுவதும் பொது இடங்கள்  மற்றும் நெடுஞ்சாலையோரம் உள்ள  சிலைகளை 3 மாதங்களில் அகற்ற சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரக்கோணம் அருகே தலைவரது சிலை ஒன்றை அகற்றிய வட்டாட்சியரின் நடவடிக்கையை எதிர்த்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வியாழனன்று (அக்.7) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு  வந்த போது, அரசியல் கட்சிகள் தங்களது  விருப்பப்படி சிலைகளை அமைக்கிறார் கள் என்று நீதிபதிகள் கருத்துக் கூறினர். மேலும், சமுதாயத்துக்காக தியாகம் செய்தவர்கள் எந்த நேரத்திலும் சாதி, மத  அடிப்படையில் அடையாளப்படுத்தக் கூடாது. பொது மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகளை அமைப்பது தொடர்பாக விரிவான விதி களை தமிழக அரசு வகுக்கவும் நீதிபதி கள் அறிவுறுத்தியுள்ளனர். அரசியல் கட்சிகள் மதம், சாதி மற்றும்  மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப் பப்படி சிலைகளை அமைக்கின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் பொது இடங்  களில், நெடுஞ்சாலையோரம் உள்ள சிலை களை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

;