tamilnadu

img

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்

சென்னை,அக்.28- தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். இதற்கான சிறப்பு முகாம்  அடுத்த மாதம் 12, 13, 26, 27 ஆம் தேதிகள்  நடைபெற உள்ளது. அந்த மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர்க ளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பி உள்ளார்.