tamilnadu

நூறுநாள் வேலை கேட்டு எரக்குடியில் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு

நூறுநாள் வேலை கேட்டு  எரக்குடியில் காத்திருப்பு போராட்டம்  பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 5 - திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றி யம் எரக்குடி ஊராட்சியில் நூறு நாள்  அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக் கும் தொடர்ச்சியாக நூறு நாள் முடியும் வரை வேலை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்  சார்பில் எரக்குடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் புதனன்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.  போராட்டத்திற்கு விவசாயத் தொழிலா ளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் கணே சன், பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விவசா யத் தொழிலாளர்கள் சங்க எரகுடி பொறுப்பா ளர் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன், உப்பி லியபுரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துக் குமார், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய  பொறுப்பாளர் வழக்கறிஞர் டி.முத்துக் குமார், சம்பூரணம், அமுதா, பரமேஸ்வரி ஆகியோர் பேசினர். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இரவு வரை தொடர்ந்து போராட்டம் நடை பெற்றது.  இதையடுத்து வட்டார வளர்ச்சி அலு வலர் தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தை  நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வாரமும் தினசரி தலா 400 தொழிலாளர்களுக்கு குறை யாமல் சுழற்சி முறையில் வேலை வழங்குவதாக  எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை முழுமையாக வெற்றி பெறவில்லை என்றா லும், படிப்படியாக தங்கள் உரிமைகளை போராட்டத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள  முடியும் என்ற நம்பிக்கையோடு கலைந்து  சென்றனர். போராட்டக்களத்தில், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தில் ஆயிரம்  பேர் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.