tamilnadu

img

தாட்கோ கடன் நடைமுறைகளை எளிதாக்குக

தாட்கோ கடன் நடைமுறைகளை எளிதாக்குக

தீஒமு வலியுறுத்தல்

ரோடு, ஜூன் 30 – தாட்கோ கடன் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.  ஈரோட்டில், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் சார்பில் பவானிசாகர் மற் றும் ஈரோடு தாலுகா சிறப்புப் பேரவை ஞாயிறன்று நடைபெற்றது. ஏ.பி.ராஜு தலைமை ஏற்றார். இதில், அமைப்பின் மாநில துணைச் செயலாளர் சி.கே.கனகராஜ் துவக்கவுரையாற்றினார். இதில், வீடற்ற பயனாளிகளுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும். பஞ்சமி  நிலங்களை மீட்டு பட்டியல் இனத்தவ ருக்கு வழங்க வேண்டும். தாட்கோ கடன்  பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.  இப்பேரவையில், புதிய ஒன்றியக்  குழுத் தலைவராக ஏ.பி.ராஜூ, செய லாளராக பி.ஜெகநாதன் மற்றும் கமிட்டி  உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச் சாமி நிறைவுரையாற்றினார். இதேபோன்று, ஈரோடு தாலுகா  பேரவை திங்களன்று, ஈரோடு தோழர் டி.பி.முத்துசாமி நினைவகத்தில் நடை பெற்றது. என்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி தொடக்கவுரையாற்ற, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.பழனிசாமி மற்றும் தாலுகா செய லாளர் என்.பாலசுப்பிரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலா ளர் எம்.அண்ணாதுரை நிறைவுரை யாற்றினார். இந்த பேரவையில், தலை வராக என்.பழனிசாமி, செயலாளராக ஆர்.மாரிமுத்து, பொருளாளராக கே. நர்மதா மற்றும் 16 பேர் கொண்ட  கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.