tamilnadu

img

சிலம்பம், களரி உள்ளிட்ட தற்காப்புக்கலை பயிற்சி வகுப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை காந்திநகரில் சிலம்பம், களரி உள்ளிட்ட தற்காப்புக்கலை பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்விற்கு வாலிபர் சங்க கிளைத் தலைவர் இதயம் முரளி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் தொடங்கி வைத்தார். நகர்ச் செயலாளர் ஜெகன், பாரதி, மணிமாறன். துணைத் தலைவர் நித்திஷ்குமார், மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.