tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

பல தசாப்தங்களாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடம் அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மோடி தனது உடனடி அமெரிக்க பயணத்தை ரத்து செய்ய வேண்டும்.

பத்திரிகையாளர் ஆண்டி முகர்ஜி

மோடி அரசு குறிப்பிடத்தக்க அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா? உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை விட்டு வெளியேற, பல இந்தியர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? அவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லையா? அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு விமானமும் இந்தக் கேள்விகளை எழுப்பும்.

மூத்த பத்திரிகையாளர் ரூபா ஸ்ரீ நந்தா

இந்திய ஜனநாயகத்திற்கும் அரசியலுக்கும் தில்லி சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான நாள் மிக முக்கியமான நாள் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆம் ஆத்மியின் பல உயர்மட்ட தலைவர்கள் தோல்வியடைந்தது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். கெஜ்ரிவாலின் தோல்வி மிக மிக முக்கியமானது.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

முதலில் பணம் பறித்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு அனுப்பும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல அமெரிக்கா-இந்தியா உறவுகள் எந்த நிலையில் உள்ளது விளக்கம் அளிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு கண்டதை கூற வேண்டாம்.