tamilnadu

img

தேர்வாணைய முறைகேடு விசாரணை: சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கில் தலைமைச்செயலர், சிபிஐ பதிலளித்திடுக!

மதுரை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பான  விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக தலைமைச் செயலர்,சிபிஐ மற்றும் தேர்வாணையத் தலைவர்  பதில் மனுதாக்கல் செய்ய சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,”  தமிழகத்தில்  தொகுதி-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது. இதேபோல தொகுதி-2 தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்்றுள்ளதாக புகார்கள் எழுந்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்வை நடத்தவேண்டும்.  முறைகேடு தொடர்பான  வழக்கையும் முறையாக விசாரித்து தீர்வு காண வேண்டும்.  இந்த வழக்கு விசாரணைகளில் இதுவரை கீழ்மட்ட அதிகாரிகளும், அலுவலர்களுமே கைது
செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே தேர்வாணையத்தின் அனைத்து நிலைகளிலும் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.  இதே கோரிக்கையை முன்வைத்து கே.கே.ரமேஷும் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை வெள்ளியன்று விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இது குறித்து தமிழக தலைமை செயலர், சிபிஐ, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;