tamilnadu

அகவிலைப்படி ஏற்புடையதல்ல: இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்

சென்னை, ஆக.17 - அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த  அறிவிப்பை வரவேற்கும் அதே நேரத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரண மாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மாநில அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப் படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். இது பொதுவாக 3 முதல் 6 விழுக்காடு  உயர்த்தப்படும்.   இந்த வருடம் ஜூன் மாதத்திற்கு  பின் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.  ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அகவிலைப்படி தங்களுக் கும் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். சங்கங்களின் கோரிக்கையை ஏற்று  அகவிலைப்படி உயர்வு செய்யப்படும் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தற்போதைய தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா காலகட்டத்தில் 18 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு வழங்கியபோது, அதைப் பின்பற்றி வழங்காமல் அப்போதும் 6 மாத காலம் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போதும் அதேபோன்று  6 மாத அகவிலைப்படி நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் கழித்து  அகவிலைப்படி உயர்வு  வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது நடைமுறைக்கு மாறாக உள்ளது. எனவே தமிழக முதல்வர் அவர்கள்  அரசு ஊழியர் ஆசிரியர்கள் பயன்பாடு வகையில் விடுபட்டுப்போன 6 மாதத்தொகை யினை பெறுவதற்கான ஆணை பிறப்பிக்கு மாறு  இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

;