tamilnadu

img

சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பொறுப்பேற்க உயர்நீதிமன்றம் தடை

மதுரை:
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடை விதித்து சென்னைஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை காரைக்குடியை சேர்ந்த தேவிசென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்மனுத் தாக்கல் செய்தார். அதில்,” சங்கராபுரம் ஊராட்சியில் வாக்குகள் எண்ணப்பட்டஅன்று 5,871 வாக்குகளை தாம் பெற்ற நிலையில் எதிர்த்துப் போட்டியிட்ட பிரியதர்ஷினி 5,808 வாக்குகள் பெற்றிருந்தார்.  நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. பின் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதில்பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது ஒரு அரசியல் கட்சியினரின் அழுத்தம் உள்ளது. ஆகவே, பிரியதர்ஷினி ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த வழக்கை சனிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி அமர்வு சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்தும்,  இந்த வழக்கு தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளனர்.'

;