tamilnadu

மணல் கடத்தல் தடுப்பு விதிமுறைகள் ஆட்சியர்களுக்கு தெரியுமா? நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை:
மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா எனசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட சிவகங்கை,விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து, சவுடு மண் எடுக்க, உபரிமண் எடுக்க என அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் திங்களன்று  நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்திஅமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகபட்சமாக கிராம நிர்வாக அதிகாரிகள், மின் துறைஅதிகாரிகள் சிலர் மீது தான் நடவடிக்கைகள் உள்ளது.

தமிழகத்தில் இதுவரை மணல் கடத்தல் விவகாரங்களில் எத்தனை வாகனங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்கள் பறிமுதல் செயல்பட்டு உள்ளது. மணல் கடத்தலை தடுக்க உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஏன் விதிமுறைகளை இயற்றவில்லை எனக் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்  மணல் கடத்தல் தடைச் சட்டத்தின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட எத்தனைநபர்கள் மீது குண்டர் சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மணல் கடத்தல் தடுப்பு குறித்தஅரசு விதித்துள்ள விதிமுறைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியுமா? அரசின் உத்தரவுகளை எத்தனை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றினார்கள்  ஒவ்வொரு வருடமும் குறைந்தது 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. கடத்தலை தடுக்க விஞ்ஞானரீதியாக ஏதேனும் முடிவு செய்யப்பட்டுள்ளதா? நீதிமன்றங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் கொடுக்கப்படும் பதில்கள் நீதிமன்றத்தை திருப்திப் படுத்துவதாக மட்டுமே உள்ளது எதுவுமே செயல்முறைபடுத்துவதாக இல்லைமணல் கடத்தலில் தொடர்புடைய கிராம நிர்வாக அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு விரிவான ஒரு நிலை அறிக்கையை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 29-ஆம் தேதிக்குஒத்திவைத்தனர். அன்றைய தினம் இந்த வழக்கு சிறப்பு அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

;