tamilnadu

சிறுவர் பூங்காவைத் தனியாருக்கு பட்டா போட்ட வருவாய்த் துறை அதிகாரிகள்!

சிறுவர் பூங்காவைத் தனியாருக்கு  பட்டா போட்ட வருவாய்த் துறை அதிகாரிகள்!

சிபிஎம் தலையீட்டால் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

திண்டுக்கல், ஆக. 25 - சிறுவர் விளையாட்டுப் பூங்கா, தனியாருக்கு  பட்டா போடப்பட்டது குறித்து குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடர்ந்தி ருந்தது. இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட வரு வாய்த்துறை பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் வரு வாய்த்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் சிறுவர்  பூங்கா இடத்தை தனிநபர்கள் விற்பனை செய்து உள்ளனர்.இந்த சிறுவர் பூங்காவை மீட்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கே. பிரபாகரன் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு  தொடுத்துள்ளார்.  

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட  வார்டு எண்.1 இல் பிளாக் எண் 24 நகரளவு எண். 720 முதல் 729 வரை ஆர்.எம். காலனி, பகுதி 1  இல் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவால் சிறுவர்  விளையாட்டுப் பூங்காவிற்கு என ஒதுக்கீடு செய்யப் பட்ட 7972 ச.மீ. பரப்பளவு இடம், தனி நபர்களுக்கு  விற்கப்பட்டு, அதற்கு பட்டாவும் வழங்கப்பட்டிருப் பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா மன்ற உறுப்பினர் கே.எஸ். கணேசன் திண்டுக் கல் மாநகராட்சியில் கேள்வி எழுப்பினார். இந்த  பட்டா ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். நகர் ஊரமைப்புத் துறை இயக்குநரால் அனு மதி வழங்கப்பட்ட இந்த மனைப்பிரிவில், பொது  உபயோக இடம் என சிறுவர் விளையாடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, நகர் ஊரமைப்புத் துறை  இயக்குநரிடம் அனுமதி பெறாமல் விற்கவோ அல்லது வகை மாற்றம் செய்யவோ இயலாது.  அவ்வாறிருக்க மனைப்பிரிவு அங்கீகாரம் பெறப் பட்ட 1992-ஆம் வருடத்திற்கு பின்பு திருத்திய மனைப்பிரிவு வரைபடம் பெறப்பட்டுள்ளதா என்று கேள்வியெழுப்பி, தற்போதைய சிறுவர் விளையாடும் இடத்தின் நிலை குறித்து விரிவான  விபரத்தையும் வழங்க மதுரை வீட்டு வசதி வாரிய  செயற்பொறியாளரையும் கே.எஸ். கணேசன் கேட்டிருந்தார். இதனிடையே, 10.12.2024 அன்று நகர மைப்பு அலுவலர் (பொறுப்பு) மேற்படி மனைப்பிரி வினை ஆய்வு செய்தார்.

அதில், சிறுவர் விளை யாடுமிடத்தை தனி நபர்கள் கம்பி வேலி அமைத்து  ஆக்கிரமிப்பு செய்திருந்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்த நிலம் தனிநபர்களுக்கு விற்கப் பட்டிப்பதும், வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா  வழங்கியுள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகரக்குழு சார்பில், மாநகரச் செயலாளர் ஏ.  அரபு முகமது திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தார்.  ஆனால், இந்த பிரச்சனையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத  நிலையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கே. பிரபா கரன் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், திண்டுக்கல் மாநகராட்சி ஆணை யர், உள்ளூர் திட்டக்குழுமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகிய 5 அதிகாரிகளுக்கு எதிராக  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் சார்வாகன் பிரபு மூலமாக பொது  நல வழக்கு தொடுத்தார்.

அந்த மனுவில், திண்டுக் கல் ஆர்.எம். காலனியில் ஆக்கிரமிப்பில் உள்ள சிறுவர் பூங்காவை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யின் அமர்வு 1-இல்  வெள்ளிக்கிழமையன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, மேற்கண்ட வழக்கில் எதிர்த்தரப்பினரான திண்டுக்கல் மாவட்ட  வருவாய் அலுவலர், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் பதிலளிக்கக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.