முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, மே 30- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலி யர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் பர வலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தலைமைச் செவிலியராகவும், செவிலியர் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வந்த ஜோன் மேரி பிரிசில்லா என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இவர் கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வு பெற இருந்தநிலையில், பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது இதையடுத்து, இதே மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் மே 27 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலி யர் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை யாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித் துள்ளார்.