குளிர் காலத்தில் கலை மான்களின் இரவு பார்வைக்கு அவற்றின் நீல விழிகள் கண்ணாடிகள் போல பயன்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குளிர் காலம் நெருங்கும்போது புற ஊதாக்கதிர் பார்வையை அதிகரிக்க இவற்றின் கண்களின் நிறம் மாறுகிறது. இது அவற்றின் முக்கிய வாழ்வாதார உணவாக இருக்கும் லைக்கன்கள் (lichen) என்னும் பாசிவகைச் செடிகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
நிறம் மாறும் விழிகள்
கலை மான்கள் சிறப்பு இரவுப் பார்வைக்கு உதவும் விழியமைப் பைப் பெற்றுள்ளன. இதனால் ஆய் வின் போது ரூடால்ஃப் (Rudolph) என்ற கலைமான் சகாக்களுக்கு வழி காட்ட தன் புகழ்பெற்ற சிவப்பு மூக்கை பயன்படுத்தவேண்டிய அவ சியமில்லை. இந்த சிறப்புப்பார்வை யின் உதவியுடனேயே அவை உணவு இருக்கும் இடத்தை தேடி கண்டு பிடித்து உண்கின்றன என்று ஆய்வா ளர்கள் கண்டறிந்துள்ளனர். பருவ காலத்திற்கு ஏற்ப கோடை யில் தங்க ஆரஞ்சு முதல் குளிர் காலத் தில் நீல நிறம் (Blue hue) வரை இந்த பாலூட்டி விலங்குகள் மட்டும் ஏன் தங்கள் கண்களின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். இந்த நிற மாற்றம் பனிப்பொழிவு அதிகம் உள்ள தீவிர மான குளிர் காலங்களில் அவை திறம் பட்டமுறையில் பார்க்கவும், புற ஊதாக் கதிர்களை கடத்தவும் உதவு கிறது. சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் பனிப் பாறைகளின் மீது விழும் போது இவற்றின் மேம் பட்ட பார்வைத் திறன் காரணமாக இவை புற ஊதாக் கதிர் ஒளியை இரண்டு மடங்கு உறிஞ்சுகின்றன. கலைமான்களின் இந்த பண்பு மேலும் பல புதிய வினாக்களை எழுப்பியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சிறப்புப் பண்பை பயன்படுத்தியே அவை இரவில் நன்றாகப் பார்க்கின்றன. இரவில் லைக்கன்கள் போன்ற உணவை தேடுகின்றன. இந்த ஆய்வுகள் யு எஸ் டார்ட்மவ்த் (Dartmouth) கல்லூரி மானுடவியலாளர் (anthro pologist) பேராசிரியர் நத்தானியல் டாமினி (Prof Nathaniel Dominy) தலைமையில் செயிண்ட் ஆண்ட் ரூஸ் (St Andrews) பல்கலைக்கழக உளவியல் மற்றும் நரம்பியல் பள்ளி யை சேர்ந்த டாக்டர் கேத்தரின் ஹோபேட்டர் (Dr Catherine Hobaiter) மற்றும் பேராசிரியர் ஜூலி ஹாரிஸ் (Professor Julie Harris) ஆகியோரால் மேற்கொள்ளப்பட் டது.
உணவு தேட உதவும் இரவுப் பார்வை
“பெரும்பாலான பாலூட்டி களைப் போல நம் கண்களுக்கும் வெளிறிய நிறத்துடன் உள்ள லைக்கன் பாசிகள் வெண்நிறப்பனி யில் இருப்பதை கண்டுபிடிப்பது மிகக் கடினம். ஆனால் உணவாக பயன்படும் லைக்கன்கள் கலை மான்களின் கண்களுக்கு பிரதி பலிப்பு அதிகம் உள்ள பனிப்பரப் பில் இருண்ட நிறத் திட்டுகளாகக் காட்சியளிக்கின்றன” என்று ஹோபேட்டர் கூறுகிறார். இந்த உயிரினங்கள் கலைமான் பாசி (“reindeer moss) என்று உள் ளூர் மொழியில் பொதுவாக அழைக் கப்படும் க்ளடோனியா ராங்கிஃ பெரினா (Cladonia rangiferina) என்ற பாசி வகை தாவரத்தையே உணவாக உண்கின்றன. இவை உயிர் வாழ அவசியமான இந்த லைக் கன் இனம் உண்மையில் பாசி யினத்தைச் சேர்ந்த தாவரம் இல்லை. பூமியின் வட கோளப் பகுதியில் இந்த தாவரம் தன் மென்மையான ஸ்பாஞ்சு போன்ற படுகைகளுடன் காணப்படுகிறது. “கலை மான்களின் இரவுப் பார்வை லைக்கன்களை உண்பதற் காக அவை பெற்றிருக்கும் தகவ மைப்பு என்று முந்தைய ஆய்வுகள் கருதின. ஆனால் அந்த ஆய்வு களால் இதற்கான சான்றுகளை கண்டறிய முடியவில்லை. என்றா லும் உலகம் முழுவதும் பதிமூன்றா யிரத்திற்கும் அதிகமான லைக்கன் இனங்கள் உள்ளன. ஆனால் இவற் றில் கலைமான்கள் உண்ணும் லைக் கன் இனங்கள் பற்றி இன்று வரை விரிவான ஆய்வு எதுவும் நடத்தப்பட வில்லை. உலகில் லைக்கன் தாவரத்தின் உயிர் பன்மயத்தன்மை செழுமை மிகுந்த இடம் ஸ்காட்லாந்து. அங்கு உள்ள ஹைலாந்து (Highlands) பகுதியில் ஆயிரத்தி ஐநூற்றுக்கும் மேற்பட்ட லைக்கன் இனங்கள் உள்ளன. கேர்ங்கோர்ம்ஸ் (Cairn gorms) பகுதியில் கலைமான்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழ்கின்றன. இவை இப்பகுதியில் ஒருகாலத் தில் அதிக எண்ணிக்கையில் காணப் பட்டன. ஆனால் வேட்டையாடி அழிக் கப்பட்டன. மீண்டும் மறுவாழ்வு தரப் பட்டதால் இப்போது இவற்றின் உள்ளூர் இனம் அதிக எண்ணிக்கை யில் இங்கு வாழ்கின்றன. அதனால் இந்த பகுதியே கலைமான் விழி களில் ஏற்படும் நிற மாற்றம் பற்றி ஆராய மிகச்சரியான இடம்” என்று ஹோபேட்டர் கூறுகிறார்.
இருக்கும் இடத்தில் இருந்தே உணவைத் தேடும் கலைமான்கள்
கேர்ங்ஹோர்ம்ஸ் மலைத்தொட ரில் கிழக்கு ஹைலாந்து பகுதியில் ஆய்வுக்குழுவினர் மார்ச் 2023 இல் லைக்கன் படுகைகள் இருக்கும் இடங்களை தேடி ஆராய்ந்தனர். புற ஊதாக்கதிர்களை பயன்படுத்தி பல வகை லைக்கன் படுகைகளை படமெடுத்தனர். வெவ்வேறு லைக் கன் இனங்கள் வெவ்வேறு அளவு களில் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சு கின்றன அல்லது பிரதிபலிக்கின்றன என்பது தெரியவந்தது. இதில் கலை மான் பாசி இனம் கதிர்களை வலு வாக உறிஞ்சுவது அப்போது கண்ட றியப்பட்டது. “இந்த பெரும் பனிப்பரப்பில் கலைமானாக நாம் இருந்தால் நம் உணவை நேரடியாகப் பெறவே விரும்புவோம். கடுங்குளிரில் தரி சாக இருக்கும் பனி படர்ந்த நிலப்பகு தியில் கலை மான்கள் உணவு தேடி அலைந்து தங்கள் ஆற்றலை வீணாக்க விரும்புவதில்லை. லைக் கன்களை தொலைவில் இருந்தே காண முடிந்தால் உணவு பற்றாக் குறையாக இருக்கும் பருவத்தில் ஆற்றலை சேமிக்க அது அவற் றிற்கு பெரிதும் உதவும்” என்று டாமினி கூறுகிறார். நலமான வாழ்வு வாழ பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் பெற்றிருக்கும் வியப்பூட்டும் எண் ணற்ற தகவமைப்புகளையே கலை மான்களின் நீல விழிகள் எடுத்துக் காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.