tamilnadu

img

இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆர்.நல்லகண்ணு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை, டிச.29- இந்திய கம்யூனிஸ்ட் கட்  சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் பிறந்த  நாள் நூற்றாண்டு விழா ஞாயி றன்று (டிச.29) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்  வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘தோழர் இரா. நல்லகண்ணு - நூறு கவிஞர்  கள் நூறு கவிதைகள்’ நூலை வெளியிட்டு பேசியதன் சுருக்கம் வருமாறு: தோழர் நல்லக்கண்ணு வின் 80 ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய கலைஞர் கருணாநிதி, “எனக்கு ஒரு  கண்தான் முகத்தில் இருக்கி றது. இன்னொன்று அகத்  திலே இருக்கிறது. இதுதான்  நல்லக்கண்” என்றார். அந்த ளவுக்கு தோழர் நல்லகண்ணு வை கலைஞர் மதித்தார். இயக்கம் வேறு, தான் வேறு  என்று நினைக்காமல், இயக் கத்திற்காக, இயக்கமாகவே வாழ்ந்துகொண்டு இருக் கக்கூடிய மாமனிதர் நல்ல கண்ணு. தாமிரபரணியை காக்க அவர் நடத்திய போராட்டம் அனைவருக்கும் தெரியும். அப்போது சென்னை உயர் நீதிமன்றம் “நமக்கெல்லாம் தனிப்பட்ட வேலை என்பது வீட்டு வேலையாக அமை கிறது. ஆனால், இந்த மனித ருக்கு எந்த நேரமும் பொது மக்களைப் பற்றிய சிந்தனை யும், அவர்களுக்காக உழை ப்பைத் தவிர வேறு வேலையே  இல்லை” என்று சென்னை  உயர்நீதிமன்றம் பாராட்டியது. திராவிட இயக்கத்திற் கும், பொதுவுடமை இயக்கத்  திற்குமான அரசியல் நட்பு  இடையிடையே விடுபட்டி ருக்கலாம். ஆனால், கொள்கை  நட்பு என்பது எப்போதும் எந்த  சூழ்நிலையிலும் தொடரும். இது தொடரக்கூடியது. சாதி யவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மைவாதம், எதேச்சதிகாரம், மேலாதிக் கம் ஆகிய அனைத்திற்கும் எதிராக, ஜனநாயக சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்று வதுதான் தோழர் நல்ல கண்ணுவிற்கு நாம் வழங் கும் நூற்றாண்டு விழா பரி சாக அமையும்!

டி.கே.ரங்கராஜன் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  டி.கே.ரங்கராஜன் பேசியதாவது: “கொள்கை யில் உறுதியாக இருந்தால் நூறாண்டு வாழலாம். என்.சங்க ரய்யா 102 வயது வரை நினைவாற்றலோடு வாழ்ந்தார். நல்ல கண்ணுவும் நீண்ட நாள் வாழ வேண்டும். இடதுசாரி இயக்கத்தின் கூட்டு செயல்பாடு தொடர்ந்து  கொண்டே இருக்கிறது. வலதுசாரி போக்கு வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. நீதிபதிகள், துறைச் செய லாளர்கள், அதிகாரிகளிடத்தில் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாசிசத் தன்மை கொண்ட வலதுசாரி சக்திகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரள வேண்டும். இடதுசாரி, ஜனநாயக ஒற்றுமை தேவை. நல்ல கண்ணு போன்றவர்களின் நேர்மை, நாணயம், வாழ்க்கை  போன்றவை நமக்கு வழிகாட்டும். இவ்வாறு அவர் பேசினார். உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிபிஐ பொதுச்  செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மேதா பட்கர்,  உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு, கவிப்பேரரசு வைரமுத்து, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவ நாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.