tamilnadu

img

460 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் எங்கே கிடைக்கிறது?

சென்னை, நவ. 29- சமையல் எரிவாயு சிலிண்ட ருக்கான தொகையை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நலத்துறை ஆணையரகம் அருகே செவ்வாயன்று (நவ. 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் அ.மலர்விழி கூறு கையில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒரு அமைப்பாளர் 7 மையங்களை கண்கா ணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு 460 ரூபாய் வழங்குகிறது. தற்போது ஒரு சிலிண்டர் 1,200 ரூபாய்க்கு விற்கப்படு கிறது. அப்படி இருக்கும் போது 460 ரூபாய் வழங்கினால் எப்படி சிலி ண்டர் வாங்க முடியும் என கேள்வி எழுப்பினார். எனவே எரிவாயு சிலி ண்டரை அரசே நேரடியாக வழங்க வேண்டும் என்றார். பல மாவட்டங்களில் கடந்த 7  மாதங்களாக குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய மானியம் வழங்கப்பட வில்லை. மானியத்தை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் இது வரை வழங்கப்படவில்லை. அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப் படும் 12 மாதம் பிரசவகால விடுப்பு  சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப் படுவதில்லை. 6 மாதம் மட்டுமே வழங்க ப்படுகிறது. எனவே ஒரே சீராக அனைத்து பெண்களுக்கும் 12 மாத கால விடுப்பு அளிக்க வேண்டும் என்றார்.இறந்துபோன சத்துணவு அமைப்பாளர்களின் குடும்பத்தில் பெண்கள் இல்லை என்றால் ஆண் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். 

அனைத்து வசதிகளும் சத்துணவு மையத்தில் உள்ளது. எனவே காலை  சிற்றுண்டி திட்டத்தை பள்ளி சத்துணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும். தமிழ கத்தில் சத்துணவு திட்டத்தில் 40 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்காத நிலையில் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறு தியில் அனைத்து சத்துணவு ஊழியர்க ளையும் அரசு ஊழியர்களாக அறி வித்து ஊதிய உயர்வும், குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் மற்றும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழி யர்களுக்கு ஒட்டுமொத்த தொகை 5 லட்சம் வழங்கப்படும் என்ற வாக்குறு தியை உடனடியாக முதல்வர் நிறை வேற்ற வேண்டும் என்றார்.

மாநிலத் தலைவர் ஆர்.கலா  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தை அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் துவக்கி வைத்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சி.ஜி.பிரசன்னா, அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்ட செயலாளர் ம.அந்தோணிசாமி, காந்திமதி நாதன் (ஊரக வளர்ச்சித் துறை) ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்து பேசினார். மாநிலப் பொருளாளர் எம்.ஆர்.திலக வதி நன்றி கூறினார். இதில் துணைத் தலைவர்கள் பே.பேயத்தேவன், ஆ.பெரியசாமி, கே.அண்ணாதுரை, மு.தமிழரசன், ஆர்.எம்.மஞ்சுளா, வாசுகி, ஜெயந்தி, மாநிலச் செயலாளர்கள் எஸ்.கற்பகம், எஸ்.சுமதி, பெ.மகேஸ்வரி, எஸ்.பாண்டிச்செல்வி, அ.லதா, ஜெ.நிர்மலா, ஜெசி உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;