tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

பொதுத் தேர்வு: முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்க ளில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக தேர்வுகள் இயக்ககம் புதிய நடைமுறையை பின்பற்றுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2  பொதுத் தேர்வில், மதுரையில் உள்ள பள்ளியில் மாணவர்  விடைத்தாளின் முதல் பக்கத்தை அகற்றி, வேறு விடைத் தாளுடன் இணைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இந்நிலையில், விடைத்தாளில் இதுபோன்ற முறை கேடுகளை தவிர்க்கும் விதமாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்  விடைத்தாள்களின் பராமரிப்புப் பணிகளை நேரடியாக மேற்கொள்ள உள்ளது. விடைத்தாளில் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும் முதல் பக்கத்தை இதுவரை பள்ளித் தலைமை  ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் இயக்ககத்தின் கண்காணிப்பில் நேரடியாக விடைத் தாளின் முதல் பக்கம் இணைக்கப்பட்டு வருகிறது. அதே போல், விடைத்தாள்களின் அனைத்துப் பக்கங்களும் முழு மையாக இணைக்கப்பட்டு, முதல் பக்கத்தை அகற்ற முடியாத  வகையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ஒன்றிய அரசின் செயல்பாடு அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது

மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டி யுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகை யில், “தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி கொடுத்ததாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகிறார். தமிழக  மக்கள் கொடுத்த வரியைத் தானே திருப்பி கொடுத்து உள்ளனர். இப்படி சொல்லும் ஒன்றிய அமைச்சர், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க  வேண்டும். அவர்கள் வீட்டு பணத்தை கொடுத்தனர். தமி ழகத்தை எவ்வளவோ இயற்கை பேரிடர் பாதித்துள்ளது. இதற்கு நிவாரணம் கோரி கடிதம் எழுதினால் 100 விழுக்காட்டில் 20 விழுக்காடு மட்டுமே கொடுக்கின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில், சுண்ணாம்பு என்ற வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது” என்றார். மொழியை திணிக்கக் கூடாது. இதையே முன்னாள் முதல்வர் அண்ணா வலியுறுத்தினார். மும்மொழிக் கொள் கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரி வித்தார்.