tamilnadu

img

கொரோனாவால் பலியான அலுவலர்களுக்கு நிவாரணம் வழங்குக... ஆக.5, 6-ல் ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டம்

மதுரை:
கொரோனாவால் பலியான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கக்கோரி ஆகஸ்ட் 5, 6 ஆகிய  தேதிகளில் ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டம் நடத்தப்போவதாக வருவாய்த்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் இரா.மங்களபாண்டியன் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கை:-தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்புப் பணியின் போது உயிரிழந்த வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இதனால் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் பெரும்வேதனையும், மனச்சோர்வும் அடைந்துள்ள னர்.கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுஉயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர் களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், நோய் தொற்றுக்குஆளான 260-க்கும் மேற்பட்ட வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர் களுக்கு உயர்தரமான மருத்துவச் சிகிச்சை மற்றும் அரசாணைப்படி கருணைத் தொகைரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்கள் தமிழகத்தின் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 12,000 அலுவலர்கள் “ஒட்டு மொத்த தற்செயல் விடுப்புபோராட்டம்” நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனைத்து மாவட்டதலைநகரங்களில் மாநில,  கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் “எழுச்சியான உண்ணாவிரதப் போராட்டம்”  எனவும் முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு கொரோனா பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;