கூடலூர் நகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தருக! ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கட்சி மனு
தேனி ,அக்.28- கூடலூர் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியு றுத்தி நகராட்சி ஆணையாள ரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி தலைவர்கள் மனு அளித்தனர் . கட்சியின் ஏரியா செய லாளர் பி.ஜெயராஜ், மூத்த தலைவர் ஏ.வி .அண்ணா மலை, இடைக்குழு உறுப்பி னர் பசீர் உள்ளிட்டோர் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், குண்டும் குழியுமாக உள்ள பூக்கடை முக்கிய சாலையை செப்பனிட வேண்டும். கன்னிகாளிபுரம் 15 ஆவது வார்டு சத்துணவு கூடத்தில் மின் இணைப்பு வழங்க வழங்கி,குடிநீர் வசதி செய்து தர வேண்டும் .19 ஆவது வார்டு பெரிய மாயத் தேவர் தெருவை சீரமைக்க வேண்டும் .சுள்ளக்கரை ஓடையில் மழை வெள் றம் வந்து குடியிருப்பு பகுதி களை பாதிக்கிறது. எனவே சுள்ளக்கரை பாலத்தை சீரமைக்க வேண்டும் என அந்த தெரிவித்துள்ளனர் .நிகழ்வின் போது திமுக நகர் செயலாளர் லோகன்துரை உடனிருந்தார்.
 
                                    