tamilnadu

img

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்

கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக வெளியிட வேண்டும், தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டையில் புதனன்று (ஜூன் 18)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், க. கனகராஜ் (சிபிஎம்), இரா. முத்தரசன் (சிபிஐ), தொல். திருமாவளவன் எம்.பி., (விசிக), தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., (திமுக), வந்தியத்தேவன் (மதிமுக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.