தனியார் பல்கலை.கள் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைப்பு
அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
சென்னை, அக். 25 “2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்” என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிக்கை விடுத்துள்ளார். அதில், தற்போது இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவ னங்கள், மாநில தனியார் பல்கலைக்கழ கங்களாக உயர விழையும்போதும், புதி தாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும் தற்போதுள்ள சில வழிமுறைகளை எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இப்பொருள் குறித்து சட்டமன்றப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத் துக்களின் அடிப்படையிலும், சமூக ஊட கங்களிலும், பொது வெளியிலும் தெரி விக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படை யிலும் இந்தச் சட்ட முன்வடிவு குறித்து கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லு நர்கள், கல்வித்துறை அலுவலர்கள் ஆகி யோரின் கருத்துக்களைப் பெற்று, அதன் அடிப்படையில் உரிய மேல் நட வடிக்கையைத் தொடரலாம் என்று முத லமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் அறிவுரையின்படி இந்தச் சட்டமுன்வடிவு திரும்பப் பெறப் பட்டு உரிய மறு ஆய்வு செய்யப்படும் என்ப தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கோவி. செழி யன் தெரிவித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த முன்வடிவு சட்டப்பேரவையில் தாக் கல் செய்யப்பட்டபோதே, அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் கடும் எதிர்ப்பை யும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதலமைச்ச ருக்கு கடிதம் எழுதப்பட்டது. பல்கலைக் கழக பேராசிரியர்கள், மாணவர் சங்கங்க ளும், அரசு ஊழியர் சங்கமும் எதிர்ப்பு தெரி வித்து வந்தன. இந்நிலையிலேயே, முதல மைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மறு ஆய்வு செய்ய மாநில அரசு முடிவு செய் துள்ளது.
முதலமைச்சருக்கு பெ.சண்முகம் நன்றி
“தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற உயர்கல்வி அமைச்சரின் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கருத்துக்கு மதிப்பளித்து உரிய முறையில் தலையிட்ட முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
