இராமநாதபுரம், ஜுன் 5 கல்லூரிகளில் ஷிப்ட் முறையை ரத்து செய்யும் முடிவை திரும்பபெற வேண் டும்,கொரோனா ஊரடங்கு தொடரும் நிலையில் தனியார் பள்ளிகளின் அநியாய கல்வி கட்டண வசூலை தடுக்க வேண்டும் ,இணையதள வசதி மாணவர்களுக்கு முழுமையாக கிடைத்தபின் பே இணையதள வழிபாடம் நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் ,பள்ளி திறப்பு மற்றும் கற்றல் கற்பித்தல் தொடர் பான அரசின் ஆய்வுக்குழுவில் மாணவர் பிரதிநிதிகள், கல்வியாளர்களை இணைத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பாக இராமநாதபுரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எஸ் எப்ஐ மாவட்டச் செயலாளர் எம் வசந்த் சர்ஜித் மற்றும் நிர்வாகிகள் ஜிவசந்த், எம் வியட்நாம் மற்றும் ராஜகுருமணிபாரதி, சிவகுமார் ,சந்தோஷ குமார், கிருபா மற்றும் சாவணன் ஆகியோர மனு கொடுக்கும் இயக்கத்தில் பங்கேற்றனர்