புதுக்கோட்டை, அக்.4 - தங்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல் நிலை யங்களில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் அவர்கள் அளித் துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித் திருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள் வதற்கு 1994-ல் துப்புரவுப் பணியா ளர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட எங்களுக்கு தொடக் கத்தில் மாத ஊதியமாக ரூ.100 மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர் 2008-ல் ரூ.900 ஆகவும், 2009-ல் அப்போதைய முதல்வர் கலைஞரால் மாத ஊதியம் ரூ.2,100 ஆகவும் உயர்த்தப்பட்டது. எங்கள் அனைவரையும் படிப்படி யாக பணிநிரந்தரம் செய்வதாக அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் காவல் நிலையப் துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வில்லை. தற்போது மாத ஊதியமாக ரூ.6,000 மட்டுமே பெற்று வருகிறோம். எனவே, எங்களைப் பணி நிரந்தரம் செய்து, ஊதியத்தை உயர்த்தி வழங்க முதல்வரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.சின்னதுரை எம்எல்ஏ., இதுகுறித்து முதலமைச்சரின் கவ னத்திற்குக் கொண்டு சென்று உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.