tamilnadu

img

எங்கள் பள்ளி! - கோவி.பால.முருகு

எங்கள் பள்ளி நல்ல பள்ளி
    இனிக்கும் கல்வி தந்திடும் அள்ளி! 
தங்க மான தலைமை உண்டு
    தகுதி உடைய ஆசான் உண்டு! 
ஓடி யாட இடமும் உண்டு
    ஓய்வுக் கேற்ற மரங்கள் உண்டு!
மாடிக் கட்டிடம் நிறைய உண்டு
    மனதை மயக்கும் அறைகள் உண்டு!
குடிக்கத் தண்ணீர் நிறைய உண்டு
    கூட்டம் ஒதுங்க கழிப்பிடம் உண்டு!
படிக்க நூலகம் பெரிதாய் உண்டு
    பல்வகை நூல்களும் அங்கே உண்டு!
அறிவியல் ஆய்வுக் கூடம் உண்டு
    அங்கே பல்வகைக் கருவிகள் உண்டு!
அறிவியல் அறிவு வளர்த்திடும் நன்று
    ஆக்கம் எங்களுக் கதனால் உண்டு!
விழாக்கள் பலவும் நடப்ப துண்டு
    விருந்தினர் பலரும் பேசுவ‌ துண்டு!
தாழா நிலையைத் தந்திடும் பள்ளி
    தரத்தில் இதுதான் உயர்ந்த பள்ளி!
உடலுடன் மூளை வலுப்பெறச் செய்யும்
    ஊறிடும் கற்பனைத் திறத்தை வளர்க்கும்!
திடமுடன் கல்வியில் மேம்மடச் செய்யும்
    திக்கெலாம் எம்பள்ளி புகழ்பெற் றோங்கும்! 
எங்களில் வேற்றுமை காணாப் பள்ளி
    ஏற்றத் தாழ்வை எண்ணாப் பள்ளி!
பொங்கிடும் அன்பால் பொழுதை நிறைக்கும் 
    போற்றிடும் பள்ளியே என்றும் சிறக்கும்!