சிவகங்கை, ஏப்.1- வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி சித்ரவதை செய்த சம் பவத்தில் சிவகங்கை மாவட் டம் மானாமதுரை காவல்துறை ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ் மீது வழக்கு பதிவு செய்யவும் டிஎஸ்பி சுந்தரமகாலிங்கம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள் ளது. மானாமதுரை ஆர்சி தெரு வில் வசித்து வரும் மாற்றுத்திற னாளியான நாகலட்சுமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மானா மதுரை ஆர்சி தெருவில் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறேன். என் வீட்டுக்கு அருகே இடப்பிரச் சனை தொடர்பாக நீதிமன்றத் தில் வழக்கு நடைபெற்று வரு கிறது. இது தொடர்பான பிரச்ச னையில் மானாமதுரை காவல் துறை ஆய்வாளர் ஆதி லிங்கம் போஸ், நாகலட்சுமியின் தாயார் பத்மாவதி, சகோதரர் குமார் ஆகியோரை காவல் நிலையத் திற்கு அழைத்து சென்று சித்ர வதை செய்துள்ளார். இது தொடர்பாக நாகலட்சுமி தமி ழக முதல்வர் ஹெல்ப் லைனுக்கு போன் செய்த தால், பத்மாவதி, குமாரை காவல்துறையினர் விடுவித் துள்ளனர். இந்நிலையில், ஆய்வா ளர் ஆதிலிங்கம் போஸ், வழக்க றிஞர் பாலாஜி சேர்ந்து அடியாட் களுடன் வீட்டுக்குள் புகுந்து வீட்டின் பின்பகுதியில் கல்லை நட்டுள்ளனர். அப்போது ஆய் வாளர் நாகலெட்சுமியை உதைத்து அவரை நிர்வா ணப்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக எஸ்பியிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். வழக்கின் விசாரணையின் அடிப்படையில் மானாமதுரை காவல்துறை ஆய்வாளர் ஆதி லிங்கம் போஸ் மீது வழக்குப் பதிவு செய்வதற்கும் மானா மதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தரமகா லிங்கம் மீது துறைரீதியான நட வடிக்கை எடுப்பதற்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.