tamilnadu

பரோல் சிறைவாசிகள் சரணடைய உத்தரவு

மதுரை, ஜூலை 1- சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் இடைக்கால உத்தரவுகளை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி. புகழேந்தி அமர்வு புதனன்று பிறப்பித்த உத்தரவில்,  ஏற்கெனவே சிறைவாசிகளின் பரோல் விடுமுறை ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பரோல் விடு முறை காலத்தை நீட்டிக்க அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. பரோலில் சென்ற அனைத்து சிறைவாசி களும் ஜூன் 15-க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பிற இடைக்கால உத்த ரவுகள் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள் ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.