tamilnadu

img

“போதையற்ற தமிழ்நாடு” ஒரு கோடி கையெழுத்து இயக்க நிறைவு நிகழ்ச்சி

100 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைப்பு

சென்னை, ஜூன் 4 - “போதையற்ற தமிழ்நாடு” பிரச்சார நிறைவு நிகழ்ச்சி  சென்னையில் நடைபெறுவதை யொட்டி 100 பேர் கொண்ட  வரவேற்பு குழு அமைக்கப் பட்டது. போதையற்ற தமிழ்நாடு எனும் முழக்கத்தை வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம்  தொடங்கி ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார  இயக்கத்தை நடத்தி வரு கிறது. கையெழுத்து இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழு வதும் கிராமங்கள், நகரங்க ளில் வாலிபர்கள் தெருத்தெரு வாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என இந்த இயக்கத்திற்கு அமோக வரவேற்பளித்தனர்.

இந்த பிரச்சாரத்தில் திரைக் கலைஞர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேது பதி, சரத்குமார், யோகி பாபு,  ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ்,  இயக்குநர்கள், விளையாட்டு வீரர்கள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள், ஓய்வு  பெற்ற நீதிபதிகள் என ஏராள மானோர் கையெழுத்திட்டனர். கையெழுத்து இயக்க பிரச்சார நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, மாநிலம் முழுவதும்  போதை ஒழிப்புக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. கஞ்சா ஒழிப் பிற்காக தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பிரச்சார இயக்கத்தின் நிறைவு விழா கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க தீரர்கள் குமார்-ஆனந்தன் நினைவு நாளையொட்டி நடைபெற உள்ளது.

இதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூன் 3) சென்னையில் நடை பெற்றது. சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி. சரவணதமிழன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் மாநிலச்  செயலாளர்கள் எஸ்.கே.மகேந் திரன், சி.திருவேட்டை, மாநிலத்  தலைவர் எஸ்.கார்த்திக், செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன்,  துணைச் செயலாளர் செல்வ ராஜ், மாவட்டச் செயலாளர்கள் கே.மணிகண்டன் (மத்திய சென்னை), தீ.சந்துரு (தென் சென்னை) உள்ளிட்டோர் பேசினர். இதில், வரவேற்புக்குழுத் தலைவராக எஸ்.கே.மகேந் திரன், கவுரவத் தலைவராக சு.வெங்கடேசன் எம்.பி., செய லாளராக எல்.பி.சரவண தமிழன், பொருளாளராக தீ.சந் துரு, புரவலர்களாக சி.திரு வேட்டை, க.பீம்ராவ்,  பேரா. காளீஸ்வரன்,  ஆ.பிரியதர் ஷினி எம்.சி, சுசீந்திரா உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;