tamilnadu

மாற்றுத்திறனாளி களுக்கு சத்தான உணவுப் பெட்டி

கொல்லம், டிச. 4- பொது விநியோகத் துறை யில் சமூக தொடர்புக்கு கேரளா ஒரு எடுத்துக்காட்டு என உண வுத் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் கூறினார். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவுப் பெட்டிகள் வழங்கும் மாவட்ட பஞ்சாயத்தின் ‘நிரவ்’ திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:  இம்மாத இறுதிக்குள் ஏழை வீட்டில் உள்ளவர்கள் உட்பட அனைத்து குடும்பங்க ளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்படும். மாநில அரசு அனைத்து பிரிவினருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மாநிலத்தில் உள்ள 137 கிராமங்கள் உட்பட நடமாடும் ரேசன் கடைகள் மூலம் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி குடும்பங் களை பராமரிக்கும் கொள்கை யை அரசாங்கம் கொண்டுள் ளது. இவ்வாறு அமைச்சர் கூறி னார். மாவட்ட ஊராட்சி தலைவர் சாம் கே. டேனியல் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளி குழந் தைகளுக்கு சத்தான உணவுப் பெட்டிகளை வழங்கும் ‘நீரவ்’ திட்டத்தை செயல்படுத்திய மாநிலத்தின் முதல் மாவட்டம் என்ற பெருமையை கொல்லம் பெற்றுள்ளது. உதவித்தொகை பெறும் 2400  மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு அரிசி (10 கிலோ), ஓட்ஸ் (1 கிலோ), பாதாம் (250 கிராம்), முந்திரி, ஹார்லிக்ஸ், பேரிச்சம்பழம் தலா 500 கிராம், மில்மாபீடா 180 கிராம் மற்றும் மில்மா பவுடர் 200 கிராம் பாக்கெட், டெய்ரிஃப்ரெஷ் பட்டர் ரஸ்க் 180 கிராம் பாக்கெட் (1), மில்க் குக்கீஸ் (1) மற்றும் பலாப்பழம் புட்டிங்-1 (500 கிராம்) என 11-வகையான சத்தான பொ ருட்கள் உணவுப் பெட்டிகளில் வழங்கப்பட்டன.

;