ஆத்தோர ஆலமரத்தில்
ஊஞ்சல் கட்டி ஆடிய பொழுதுகள்...!
வாய்க்கால் கரையோர
நாவல் மரமேறி உலுக்கிய பொழுதுகள்...!
களத்து மேட்டு கருவேல மரநிழலில்
கூட்டாஞ்சோறாக்கி கூடி உண்ட பொழுதுகள்...!
கழனியில் பாடுபட்ட பின்பு
மோர் கஞ்சி குடித்த பொழுதுகள்...!
குரவை மீனைப் பிடிச்சு
சுட்டு கருக்கிய பொழுதுகள்...!
அயல் தேச அக்னி வெயிலில்
நினைவலைகளில் வந்து போகிறது
மரமும் நிழலும் கூடவே எல்லா
பொழுதுகளும்...!
அப்துல் சத்தார்