tamilnadu

img

“என் வேட்பாளரய்யா நீங்கள்...”

மதுரை ஆலங்குளம் மெயின்ரோடு சந்திப்பு முதல் பீபிகுளம் வரை செல்லும் பிரதான சாலை அந்த காலை வேளையிலேயே செங்கொடிகளும், கூட்டணிக் கட்சிகளின் கொடிகளும் படபடக்க, கூட்டம் கூட்டமாக ஏராளமான தோழர்கள் புன்னகையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்தார்கள்.ஏராளமானோர் குவிந்திருந்ததால் வழக்கத்தைவிட போக்குவரத்து சற்று நெரிசலாகத்தான் இருந்தது. ஆனால் வாகன ஓட்டிகள் எவரது முகத்திலும், நெரிசல் காரணமாக எரிச்சலோ, வெறுப்போ தென்படவில்லை.சு.வெங்கடேசன் வாக்கு கேட்டு வருகிறார் என்ற அறிவிப்பு அவர்களது முகத்தில் லேசான புன்னகையையும், எந்த திசையிலிருந்து வருகிறார் என சாலையின் குறுக்கு சாலைகளை பார்த்தவாறே ஓட்டிச் சென்றனர்.வெற்றிமுகம் காட்டி, சிவப்பு துண்டு அணிந்து, வெள்ளை சிரிப்புடன் தூரத்தில் தெரிந்தார் வேட்பாளர் வெங்கடேசன். அவரது வாகனத்திற்கு முன்னும், பின்னும் நூற்றுக்கணக்கான தோழர்கள் - கூட்டணிக் கட்சி தொண்டர்கள், அந்தந்த பகுதி பொதுமக்களில் சிலர் என உற்சாகம் கரைபுரள, ஒரு பேரணியே வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் ஆரத்தியோடு காத்திருந்த பெண்கள் சிரிப்பும் உற்சாகமுமாய் அவரை வரவேற்று நெற்றி திலகமிட்டனர்.ஒரு வீட்டில் அந்த பெண்மணி ஆரத்தி தட்டில் சூடத்தை கொளுத்திய போது அது அணைந்துவிட்டது. வீட்டிற்குள் சென்று மற்றொரு தீப்பெட்டி எடுத்து வருவதற்குள் வேட்பாளரின் வாகனம், நேரத்தின் அருமை கருதி நகர்ந்துவிட்டது. வீட்டினுள் இருந்து கணவனும், மனைவியும் ஓடி வந்தார்கள். எங்கள் வீட்டு ஆரத்தியை பெற்றுக் கொள்ளாமல் செல்லலாமா என வருத்தத்துடன் விடாமல் ஓடி வந்தார்கள். அவர்களை பார்த்து வேட்பாளர் வெங்கடேசன், வண்டியை நிறுத்தி கீழே இறங்கி அந்த வீட்டு வாயிலுக்கே மீண்டும் வந்தார். அவருக்கு நெற்றி திலகமிட்ட அந்த பெண்ணின் கணவர், “என் வேட்பாளரய்யா நீங்கள்” என்று உணர்ச்சி பெருக்குடன் ஆரத்தழுவினார்.வழிநெடுகிலும், இத்தகைய உணர்ச்சி பெருக்குகள்; உற்சாக வெள்ளம்; பேரன்பின் வெளிப்பாடு.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, இதோ வீதிகள் தோறும் ஒரு எழுத்தாளனை கொண்டாடுகிறது. சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தை கொண்டாடுகிறது.வெற்றி முகம் காட்டி வீரநடை போடுகிறார் வெங்கடேசன்.


பிரச்சார மேற்கொண்ட இடங்கள்:


இத்தகைய வரவேற்புகளுடன் வேட்பாளர் சு.வெங்கடேசன் திங்களன்று டி.வி.எஸ்.நகர், பீ.பீ.குளம், சரவணா மருத்துவமனை, மருதுபாண்டியர் நகர், தனிக்கொடி வீட்டுத்தெரு, மருதுபாண்டியர் நகர் மெயின், ரத்தினசாமி நாடார் மெயின், சொக்கநாதர்புரம், கிருஷ்ணாபுரம் தெருக்கள், பீ.பீ.குளம் சந்திப்பு, இந்திராநகர் தெருக்கள், சொக்கிக்குளம், அண்ணாநகர், பாஸ்கர் காம்ப்ளக்ஸ், லேடி டோக் ரோடு, பி.டி.ஆர். 3, 4, 6, 8 தெருக்கள், பி.டி.ஆர். பிரதான சாலை, அரசன் ஸ்வீட் சந்திப்பு, ரயில்வே காலனி, செல்லூர் மார்க்கெட், வெண்மணி தெரு - அகிம்சாபுரம் முக்கிய வீதி - ஜான்சிராணி 3வது தெரு - அம்பேத்கர் நகர் - சிவன் தெரு - ஆர்.எஸ்.நாயுடு தெரு - குமரன் சாலை - பாலம் ஸ்டேஷன் ரோடு - மேலத்தோப்பு - சன்னதி தெரு - கீழத்தோப்பு - 60 அடி ரோடு, காரல் மார்க்ஸ் தெரு, ஆழ்வார்புரம் - வைகை வடகரை - மத்திய பகுதி - அரசு மருத்துவமனை வடக்கு பகுதி, புளியந்தோப்பு - ஆர்.ஆர்.மண்டபம் - மேலக்காரத்தெரு - வைகை வடகரை - மதிச்சியம் காவல் நிலையம் - சப்பாணிக்கோவில் தெரு - சிவாலயம் மெயின் ரோடு - எஸ்.ஆர்.கே.இறக்கம் - மதிச்சியம் மத்திய தெரு - காளியம்மன் கோவில் தெரு - பகவதியம்மன் கோவில் தெரு - சுப்புராயன் தெரு - விவேகானந்தர் 1, 2 தெருக்கள் - ஷூமேக்கர் காலனி தெரு - ஷா தியேட்டர் - கல் மண்டபம் - அரவிந்த் கண் மருத்துவமனை - மாவட்ட ஆட்சியர் ரோடு - பி.டி.காலனி - இந்திரா நகர், சதாசிவம் நகர், சௌராஷ்டிராபுரம், தீர்த்தக்காடு, வண்டியூர், கபீர் நகர், ஜே.ஜே.நகர், ஜூப்ளி டவுன் - ஆவின் நகர், வளர்நகர் - உத்தங்குடி, உலகநேரி, அம்பலக்காரன்பட்டி, உத்தங்குடி. ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.


வாக்குச்சேகரிப்பில் திமுக மதுரை மாநகர் பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ராதா, ஜா.நரசிம்மன், பகுதிக்குழுச் செயலாளர்கள் ஏ.பாலு. டி.குமாரவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.ஜெயச்சந்திரன், கே.அலாவுதீன், சிஐடியு மாவட்டத் தலைவர் வாசுதேவன் மதிமுக மாவட்டச் செயலாளர் பொடா மு.பூமிநாதன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வி.கார்த்திகேயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.கதிரவன் சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் கலந்துகொண்டனர்.


படங்கள்: ஜெ.பொன்மாறன்


;