tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் குடியேறும் போராட்டம்

தருமபுரி, நவ.1- பொய்  வழக்கை வாபஸ் பெறக்  கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்  றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான  சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் மாற்றுத்திற னாளிகள் என்று கூட பாராமல் போலீ சார் தரதரவென இழுத்துச் சென்ற  செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. மாற்றுத் திறனாளிகளுக்கென்று போராடிப் பெற்ற சலுகைகளையும், உரிமைகளையும் அதற்கான அர சாணைகளையும் நிறைவேற்ற தருமபுரி மாவட்ட  நிர்வாகம் மறுத்து வரு கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமை யில் 2 மாதங்களுக்கு ஒரு முறையும், சாராட்சியர் தலைமையில் மாதம் 1 முறையும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர் நாள் கூட்டம் நடத்தவேண் டும். குறை தீர் கூட்டம் நடத்தாமல் இருட்டடிப்பு செய்ததை கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளின் சலுகைகளை பெற இடைத்தரகர்கள் மூலம் வழங்கு வதை தடுப்பது  உள்ளிட்ட 27 கோரிக்கை களை வலியுறுத்தியும்  தருமபுரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு குடி யேறும் போராட்டம் கடந்த ஜூலை 5- ம் தேதியன்று  மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை மூலம்  தீர்வை எட்டாமல், காவல்துறை யை ஏவி விட்டு போராட்டத்தை சீர் குலைத்து மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில், சங்கத் தலைவர்களு டன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 25 கோரிக்கைகளை நிறைவேற்று வதாக மாவட்ட ஆட்சியர் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தார்.  போராட்டத்தின் போது  அத்துமீறி நடந்துகொண்ட காவலர்கள் மீது நட வடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை யில் உறுதியளித்த மாவட்ட நிர்வாகம், அதற்கு மாறாக மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் மீது குற்றவியல் வழக்கு எண். 143 (சட்டவிரோதமாக கூடுவது),  341 (அத்துமீறல்), 269 (உயிருக்கு ஆபத்  தான முறையில் நோய்த் தொற்றை பரவசெய்தல்) உள்ளிட்ட பிரிவில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளது.  காவல்துறையின் இந்த போக்கை கண்டித்தும் மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு பொய் வழக்கை வாபஸ் பெற  வேண்டும். மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தையின் போது எழுத்துப்பூர்வ மாக எழுதி கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்ற கோரியும், போராட்ட உரிமைகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போம் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் மாபெ ரும் குடியேறும் போராட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் தெ.வில்சன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.நம்புராஜன்,மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாவட்ட செய லாளர் எம்.மாரிமுத்து மாவட்ட தலை வர் கே.ஜி.கரூரான், மாவட்ட பொருளா ளர் ஜி.தமிழ் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.  இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இதனை பார்த்த போலீசார் கலைந்து செல்லு மாறு நிர்பந்தித்தனர். ஆனாலும், உறுதி யோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தை கலைக்க சங்க தலைவர்கள் கே.ஆர்.சக்கரவர்த்தி, எம்.மாரிமுத்து தமிழ்செல்வி ஆகி யோரை போலீசார் பலவந்தமாக இழுத்து கீழே தள்ளினர். காவல் துணை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட   காவலர்கள்‌‌, மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த தமிழ்செல்வியை  கை வைத்து கீழே தள்ளினர்.

இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் தருமபுரி கோட்டாட்சியர் (பொ)  ஜெயக்குமார், வட்டாட்சியர் ராஜ ராஜன், உதவி காவல் கண்காணிப்பா ளர் அண்ணாமலை, காவல் ஆய்வா ளர் நவாஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். அப்போது சங்க தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொன்னதை அடுத்து மறியலை கைவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழையை யும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்த னர். வெகுநேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் வரவில்லை. போலீசாரும் மதிய உணவு வழங்கவில்லை. மாற்றுத் திறனாளிகள் சிலர் உணவு இல்லா மல் மயக்கமடைந்தனர். பேச்சு வார்த்தை என்று அழைத்து விட்டு மாவட்ட ஆட்சியர் வராததைக் கண் டித்த சங்கத் தலைவர்கள், வேறு வடி வத்தில் போராட்டம் நடத்துவது என முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.