tamilnadu

போதை கும்பலிடம் விற்கப்பட்ட மகனை மீட்டுத்தர தாய் கோரிக்கை

சிவகங்கை, டிச.29- மலேசிய போதை பொருள் கும்பலி டம் விற்கப்பட்ட தனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்று தாய்  சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். முத்துபட்டிபுதூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் கடந்த வருடம் மலேசியாவில் கோவில் வேலைக்கு ஏஜென்ட் சரவணன் மூலமாக புறப்பட்டு சென்றார். ஆனால் அங்கு சென்ற ஆனந்திற்கு கோவில் வேலை வழங்கப்படாதது மட்டுமின்றி போதை பொருள் கும்பலிடம் விற்கப் பட்டுள்ளார். மலேசிய காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு ஆனந்தை மீட்டு அங்குள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலை யில் அந்த இளைஞரை மீட்டு தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஆட்சியரிடம் அவரது தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.