tamilnadu

img

விளையாட்டு...

மினி உலகக்கோப்பை கிரிக்கெட் - 2025 இன்று விடுமுறை

கிரிக்கெட் உலகில் மினி உல கக்கோப்பை என அழைக்கப் படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வருகிறது.  இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயி றன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில்  இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸி லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4  அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.  இந்நிலையில், லீக் ஆட்டங்களில் விளையாடிய களைப்பை போக்க மினி உலகக்கோப்பைக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செவ்வாய்கிழமை அன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி  உலக சாதனை

மினி உலகக்கோப்பை போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூஸி லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் மூலம் தனது 300ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் இதுவே யாரும் படைக்காத அளவில் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.  கிரிக்கெட் உலகில் ஒட்டுமொத்தமாக 18 வீரர்கள் தங்கள் நாடுகளுக்காக 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற இரண்டு வடிவங்களிலும் தலா 100 போட்டிகளில் விளையாடியதில்லை. ஆனால் விராட் கோலி 300 டெஸ்ட், 123 டெஸ்ட், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன்மூலம் அனைத்து வித சர்வதேசப் போட்டிகளிலும், 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

பிரான்ஸ் வீரர் மாடெட்டா படுகாயம் இடது காதுப் பகுதியில் 25 தையல்

இங்கிலாந்து நாட்டின் முக்கிய கிளப் கோப்பையான எப்ஏ கோப்பை (Football Association Challenge Cup) தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் கிரைஸ்டல் பேலஸ் - மில்வால் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிரைஸ்டல் பேலஸ் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.  இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வருத்தம் அளிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிரைஸ்டல் வீரர் மாடெட்டா (பிரான்ஸ் வீரர்) கோலடிக்க முயன்று பந்தை முட்ட முயன்றார். அப்போது மில்வால் அணியின் கோல் கீப்பரான ராபர்ட்ஸ் (வேல்ஸ்) பந்தை தடுக்கும் நோக்கில் காலால் உதைத்தார்.  எதிர்பாராவிதமாக மாடெட்டாவின் இடது காது பகுதியில், ராபர்ட்ஸின் ஷூ பலமாக தாக்கியது. ஷூவில் ஆணிகள் இருப்பதால் மாடெட்டா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 4 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் இடது காதில் 25 தையல்களுடன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு, தற்போது தொடர் கண்காணிப்பில் மாடெட்டா உள்ளார். அவரது உயிருக்கு  ஆபத்து இல்லை என்றாலும், இனிமேல் மாடெட்டா வழக்கமாக  விளையாடுவது குறித்து வரும் நாட்களில் தகவல் அளிக்கப்படும் என மருத்துவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.