tamilnadu

img

நெய்வேலியில் மாபெரும் பேரணி

நெய்வேலி,டிச.26- என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம்  கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களு க்கும், விவசாயிகளுக்கும் நிரந்தர வேலையும், உரிய இழப்பீடு கேட்டு  நெய்வேலியில் திங்களன்று (டிச.26)  மாபெரும் பேரணியும் ஆர்ப்பாட்ட மும் நடைபெற்றது. என்.எல்.சி நிறுவனம் மின்சார உற்பத்திக்காக 53 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி மின்சார உற்பத்தி செய்து பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றது. ஆனால் நிலம் கொடுத்த மக்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு இல்லை, உரிய  இழப்பீட்டு தொகை வழங்கவில்லை இந்த நிலையில் என்.எல்.சி நிர்வாகம் தற்போது புதிதாக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையுடன் இணைந்து விவசாயிகளின் வீடு களை இடித்து, நிலங்களைக் கையகப் படுத்த முயற்சி செய்து வருகின் றது. மேலும் புதிதாக நிலங் களைக் கையகப்படுத்தவும், வீடு களை இடிக்கவும் பல்வேறு கட்ட  நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.

கோரிக்கை மனு  

என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்த விவசாயிகளும், பொது மக்களும் மற்றும் புதிதாக வீடு நிலம் கையகப்படுத்தப்பட உள்ள மக்க ளும், பல்வேறு கட்சித் தலைவர் களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் நில ஆர்ஜித சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டியும் தற்போது புதிதாக எடுக்கப்படவிருக்கும் நில உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நாளிலேயே நிரந்தர வேலைக்கான பணி ஆணை வழங்க  வேண்டும் என்றும் வேலை பெற விரும்பாதவர்களுக்கு ஒருமுறை பணப்பயனாக ரூ.50 லட்சம் வழங்க  வேண்டும், என்.எல்.சி நிர்வாகம் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்,  வீட்டுமனைக்கு வகைப்பாடு வித்தி யாசம் என்று ஒரு சென்ட்க்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தியுள்ளனர்.

மேலும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் போது தமிழக அரசு வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளதைப் போல் என்.எல்.சி நிர்வாகம் கையகப் படுத்தும் நிலத்திற்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும், நிலம் கொடுத்த மற்றும் புதிதாக நிலம்  கொடுக்க உள்ளவர்களுக்கு பார பட்சம் இன்றி நிரந்தர வேலை மற்றும்  உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க  வேண்டும். ஏற்கனவே இரண்டு முறை அமைச்சர்கள் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. அதேபோல் முத்தரப்பு கூட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட மற்றும் புதி தாக நிலம் வழங்க உள்ள விவ சாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிரந்தர வேலை, உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர். இக்கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, திங்களன்று அனைத்துக் கட்சிகள் சார்பில், நெய் வேலி புதுக்குப்பம் ரவுண்டானா விலிருந்து தொடங்கிய பேரணி மத்திய பேருந்து நிலைய பொதுக் கூட்டத் திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டத்துடன் முடிவடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக  வாழ்வுரிமைக் கட்சி,    மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சி களின் சார்பில் நடைபெற்ற இப்பேரணி - ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன், சிபிஐ மாநில செய லாளர் இரா. முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலத் தலைவர் தி.வேல்முருகன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் மாநில செய லாளர் ஜவஹிருல்லா, காங்கிரஸ் கட்சியின் எம்.ஆர்.ராதா கிருஷ்ணன், திராவிட கழகத்தின் துரை. சந்திரசேகரன், மக்கள் அதி கார மையத்தின் ராஜூ உள்ளிட்ட  மாநில, மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.