tamilnadu

img

மருத்துவமனையில் மார்க்சிய அறிஞர் நோம் சோம்ஸ்கி

சாவோ பாலோ, ஜூன் 28 - அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர், சமூகப் போராளி, அரசியல் விமர்சகர், மார்க்சிய அறிஞர் நோம் சோம்ஸ்கி அவர்கள் கடந்த ஓராண்டாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக அவரது நெருங்கிய குடும்ப மற்றும் நட்பு வட்டத்தினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.95 வயதான அவர் கடந்த ஒரு ஆண்டாகவே பொது வெளிக்கு வராததால் அவரது இருப்பு குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.  அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகி யவற்றின் சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்கு, பாசிசத்தின் வளர்ச்சி , பாசிசத்தின் மீதான கடுமை யான விமர்சனம் என தொடர்ந்து எழுதியும் பேசி யும் வந்த சோம்ஸ்கி, இந்திய வரலாற்று ஆய்வா ளரும் ட்ரை காண்டினெண்டல் இயக்குநரு மான விஜய் பிரசாத், இ.டி.ஹெர்மன் ஆகியோரு டன் இணைந்து பல இடதுசாரி நாடுகள் குறித்து சர்வதேச அரசியல் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த ஓராண்டாக அரசியல் நிகழ்வுப்போக்குகள் குறித்து எந்தக் கருத்துகளைச் சொல்லாமலும், கட்டுரைகளும், நேர்காணலும் கொடுக்காமலும் இருந்தார். 

கருத்துக்களை பகிராத ஓராண்டு 

இந்த காலக்கட்டத்தில் தீவிரமாகியுள்ள  இஸ்ரேல்- பாலஸ்தீன போர் குறித்தும், அமெரிக்க - மத்திய  கிழக்கு அரசியல் சூழல் குறித்தும் அவர் எந்த  கருத்துக்களையும் பகிர வில்லை. அவரது சமூக ஊடகக் கணக்கு களிலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது சர்வதேச அளவில் பல அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற் படுத்தியதுடன், முக்கியமான காலக்கட்டத்தில் ஒரு மூத்த ஆய்வாளரின் அரசியல் நோக்கு, பார்வை கிடைக்காத சூழலையும் ஏற்படுத்தியது. இதனால் பலரும் அவரது சமூக ஊடகக் கணக்குகள், மின்னஞ்சல் வழியாக நலம் விசாரிக்க தொடர்பு கொண்டனர். அப்போதும் எந்தப்பதில் தகவலும் வரவில்லை.

உதவியாளரின் பதில் 

இந்நிலையில் நோம் சோம்ஸ்கியின் நீண்டகால உதவியாளரான பெவ் ஸ்டோல் தற்போது பதிலளித்திருந்தார். “சோம்ஸ்கியின் நெருங்கிய குடும்ப உறுப்பினருடன் நான் தொடர்பில் உள்ளேன். அதன் மூலம் அவரது தற்போதைய நிலையை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. 95 வய தான சோம்ஸ்கிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெரும்பான்மை யான நேரம் அவரது உடலுக்கு ஓய்வு கொடுக்க வும், மருத்துவப் பராமரிப்புகளுக்குமே சென்று விடுகிறது. இதன் காரணமாக அவரால் அர சியல் நிகழ்வுப்போக்குகள் குறித்து எழுதவோ, நேர்காணல் செய்யவோ முடியவில்லை சோம்ஸ்கி மீண்டு வருவார்” என ஸ்டோல் 2024 பிப்ரவரி 25 அன்று தெரிவித்திருந்தார். அதன் பிறகு ஏப்ரல் 23 அன்று சோம்ஸ்கி உடல் நலனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் முன்பைப் போல் அவரால் பொது வெளியில் செயல்பட முடியுமா என தெரியவில்லை என  கவலையுடன் குறிப்பிட்டிருந்தார்.

பக்கவாதத்திற்கான சிகிச்சை 

கடந்த ஆண்டு அமெரிக்காவில் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட சோம்ஸ்கி தற்போது உயர் சிகிச்சைக்காக அவரது மனைவி வலேரியா வின் சொந்த நாடான பிரேசிலில் சாவோ  பாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.   

காசாவிற்காக உயரும் இடது கை 

தற்போது வரை சோம்ஸ்கி சரளமாக பேசத் தடுமாறுவதாகவும், பக்கவாதத்தால் அவரது உடலின் வலது பக்கம் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரம்பியல் நிபுணர், பேச்சு சிகிச்சை நிபுணர் மற்றும் நுரை யீரல் நிபுணர் ஆகியோர் தினமும் அவரைச் சந்தித்து சிகிச்சையளிப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து சர்வதேச அரசியல் நிகழ்வு போக்கு களை கவனித்து வருவதாகவும், செய்திகளை பார்ப்பதாகவும் அவரது மனைவி வலேரியா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக காசா குறித்தான செய்திகளையும் படங்களையும் பார்க்கும் போது அவரது இடது கையை உயர்த்தி சைகை மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்துவ தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்பை விட அவரது நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

;