tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து!

சென்னை, டிச. 31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வருமாறு: தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. புதுதில்லியில் விவசாயிகள் நடத்திய வரலாறு காணாத போராட்டம், அதன் மூலம்  கிடைத்த வெற்றிப் பெருமிதத்துடன் புத்தாண்டு மலர்வது புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளாக உலக மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா பெருந்தொற்று; அதன் விளைவாக ஏற்பட்ட மக்களின் வாழ்வாதார நெருக்கடிகளிலிருந்தும் மீண்டு மக்கள் நலம்பெற்று வாழ்ந்திட, மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையும் என நம்புகிறோம். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்கள் உலகெங்கும் பீறிட்டு வெடித்த வண்ணம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக  இடதுசாரிகள் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றனர். அதுபோன்றே சோசலிச நாடுகளான சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா மக்கள் நல அரசுகளாக பேரிடர் தொற்றை எதிர்கொண்டு வளர்ச்சி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 

இந்தியாவில் கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கு வழிகாட்டும் வகையில் கல்வி, கலை, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் முன்னேறி வருகிறது.

பாஜக தலைமையிலான ஒன்றிய அர சாங்கம் இந்திய அரசியலமைப்பின் விழுமியங் களை சிதைக்கக் கூடிய வகையில் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்  நாடியாக உள்ள சிறு-குறு, நடுத்தர தொழில் களை ஜி.எஸ்.டி. புதிய வரி விகிதங் களால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கி யுள்ளது. மறுபக்கம், கார்ப்பரேட் பெரு முத லாளிகளுக்கான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், சகோதரத்துவம் போன்ற விழுமியங்களை அழித்தொழிப்பதில் பாஜக அரசு குறியாக உள்ளது. இந்திய இறையாண்மையையும், மதச்சார் பின்மையையும், மக்கள் ஒற்றுமை,

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை அம்சங்களையும் பாதுகாக்க நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து போர் முழக்கம் எழுப்பும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமைந்திடும். தமிழகத்திலும், ஆட்சிப் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை யிலான அரசு நம்பிக்கையளிக்கும் வகையில்  தனது பாதைகளை வகுத்துக் கொண்டு முன்னேறி வருகிறது. ஒன்றிய அரசுடன் போராடி, வாதாடி தமிழகத்தின் வருவாயை பெருக்குவது, அதைக்கொண்டு மக்கள் நல நடவடிக்கைகளை உறுதியுடன் நிறை வேற்றுவது என்ற வகையில் திமுக அரசு செயல்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி விரும்புகிறது. சாதிய, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உத்தரவாதப்படுத்தவும், அனைத்துப் பகுதி மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாத்திடவும், மக்கள் ஒற்று மை பேணுவதிலும், பாலின ஒடுக்குமுறை யற்ற சமூக, சமத்துவ சமுதாயத்தை படைப்பதிலும் தமிழக மக்கள் உறுதியுடன் செயலாற்ற முன்வர வேண்டுமென புத்தாண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.