tamilnadu

img

மாமதுரை அன்னவாசல்... தொடரும் வெற்றியின் ரகசியங்கள்

கொரோனா ஊரடங்கை யொட்டி மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மாமதுரை அன்னவாசல் திட்டத்தை கடந்த 50 தினங்களுக்கும் மேலாக செயல்படுத்தி வருகிறார். இந்தத் திட்டத்தின் வெற்றிக்குப்பின்னால் முகம் தெரிந்தவர்கள், நன்கு அறிமுக மானவர்கள், முகம் தெரியாதவர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள், தொழிலாளர்கள் உள்ளனர். இந்தத் திட்டத்திற்கு ரூ.5 லட்சத்தை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். இந்த அர்ப்பணிப்பு மிக்கப் பணி யில் சமையலர்கள், அவரது உதவி யாளர்கள், சமைத்த உணவை பொட்டலமாக தயார் செய்யும் இளை ஞர்கள், அதை உரிய இடத்திற் குக் கொண்டு சென்று விநியோ கிப்பவர்கள் என ஆயிரக்கணக்கா னோர் தங்களை ஈடுபடுத்திக் கொண் டுள்ளனர்.

வயதுமுதுமை காரணமாக ஆர்வம் இருந்தும் இந்தப் பணியில்  ஈடுபடமுடியவில்லை என்ற ஏக்கத் தோடு இருப்பவர்கள் தங்களால் ஆன உதவிகளைச் செய்துவரு கிறார்கள். மாமதுரை அன்னவாசல் திட்டம் சமயநல்லூர் பகுதியில் தொடர்ந்து  செயல்பட்டுவருகிறது. இங்கு  தன்னார்வலராக வந்து இணைந்த வர் சமயநல்லூர் வீரக்குமார். இந்தத் தன்னார் வலருக்கும் இதே  பகுதியைச் சேர்ந்த ராதிகா என்பவ ருக்கும் ஞாயிறன்று மிக எளிமை யான முறையில் சமயநல்லூரில் நடை பெற்றது. புதுமணத் தம்பதிகளான வீரக் குமார்-ராதிகா மாமதுரை அன்ன வாசல்  திட்டத்தை பாராட்டி மன முவந்து சமயநல்லூர், ஊர்மெச்சி குளம் பகுதியைச் சேர்ந்த 350 பேருக்கு உணவு வழங்கி தங்களது வாழ்க்கை யைத் தொடங்கினர்.

உணவு வழங்கும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்வில் மாணவர் சங்க மாநி லத் துணைத் தலைவர் கண்ணன், புறநகர் மாவட்டத் தலைவர்  க. ராகுல்ஜீ, மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் இந்திரா, பொருளாளர் தேவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட் டக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் மனோகரன், கருணாநிதி மற்றும் மாமதுரை அன்ன வாசல் தொண்டர்கள் கலந்து  கொண்டனர்.