tamilnadu

கொரோனா ஊரடங்கு அனைவருக்கும் ரூ.1000 கிடைப்பதை உறுதி செய்க!

மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மதுரை, ஜூலை 3- மதுரையில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அனைவருக்கும் ரூ.1000 அரசு நிவாரணம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜய ராஜன் விடுத்துளள அறிக்கை:- மதுரை மாநகராட்சி, திருப்ப ரங்குன்றம், பரவை பேரூராட்சி புற நகரில் மேற்கு கிழக்கு யூனியன்களில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து தமிழக அரசு நிவாரணமாக ரூ.ஆயிரம் வழங்கு வதாக அறிவித்தது.  நியாய விலை கடை ஊழியர்கள் வீடுவீடாக வந்து ஆயிரம் ரூபாயை வினியோகித்தனர். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 90 சதவீத வினியோகம் நடந்துள்ளது. ஒவ்வொரு கடையிலும் 40 லிருந்து 100 பேர் ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெற வேண்டியுள்ளது. பல இடங்க ளில்  தங்களுக்கு அறிவித்த நிவார ணத்தை ஏன் வழங்கவில்லை  என்று மக்கள் கேட்டதற்கு  எங்களுக்கு அரசி டமிருந்தும், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வந்த பணத்தை கொடுத்து விட்டோம் எனக் கூறுகின்றனர். மேற்கொண்டு மற்ற கார்டுகளுக்கு அரசு தந்தால் நாங்கள் மக்களுக்கு தரமுடியும் என கூறுகின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூபாய் 1,000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன் பொருள்  விநியோகம்

மத்திய அரசு நவம்பர் வரை ரேஷன் கார்டுகளுக்கு ஐந்து கிலோ  வீதம் உணவுப்பொருள் வழங்குவ தாகக் கூறியுள்ளது. மாநில அரசு வழக்கமாக வழங்கப்படும் பொருட்க ளுடன் மத்திய அரசு அறிவித்ததை யும் மக்களுக்கு வழங்க வேண்டும்.  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட புது விளாங்குடி சிஐடியு காலனி கடை எண் 3 ஜூலை 1, 2  ஆம் தேதிகளில் கடைதிறக்காமலே அனைத்து பொருட்களும் வழங்கி விட்டதாக சில ரேஷன் கார்டுகளுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.  இதுபோன்ற நடக்கும் தவறு களை சரிசெய்து அனைத்து கார்டுதா ரர்களுக்கு அனைத்துப் பொருட்க ளும் கொரோனா பேரிடர் காலம் முடி யும் வரை இலவசமாக வழங்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் 100 சதம் பொருட்கள் கடைகளுக்கு வழங்கவேண்டும்.

;