மதுரை பொதுக்கூட்டக் காட்சிகள்
இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கமிட்ட குழந்தைக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வாழ்த்து. உடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
புதுகை பூபாளம் கலைக்குழுவினர்
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம் பொறித்த குடைகளுடன் பங்கேற்ற தோழர்கள்.
மயிலாடுதுறையில் கே.பாலகிருஷ்ணன் முழக்கம்
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஞாயிறு மாலை கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைப்பெற்றது. இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு கை சின்னத்தில் வாக்குக்கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, திமுக மாவட்ட செயலாளரும்,பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜகுமார், திமுக ஒன்றிய செயலாளர் முருகமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன்,டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், ஜி.வெண்ணிலா, சி.விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், ஒன்றிய செயலாளர்கள் டி.ஜி.ரவி, மயிலாடுதுறை நகர செயலாளர் டி.துரைக்கண்ணு, அசோகன்,கேசவன்மற்றும் மாவட்ட,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினர். மாவட்டம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரியப்பன் நன்றி கூறினார்.
பிரச்சாரக் களத்தில் கலக்கும் சக்தி கலைக்குழு
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் திண்டுக்கல் சக்தி கலைக்குழுவின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலகப்புகழ் பெற்ற சக்தி கலைக்குழு சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரித்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.