tamilnadu

img

மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், மதுரை மாநகரில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். செவ்வாயன்று ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனர் கு.ஜக்கையன், பொதுச் செயலாளர் விஸ்வை குமார், மாநகர் மாவட்டச் செயலாளர் சந்துரு, புறநகர் மாவட்டச் செயலாளர்கள் ஆனந்த், மகாலட்சுமி, புறநகர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆதரவு திரட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உடன் உள்ளார்.